133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘800’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் தார் பிக்ஷர்ஸ் நிறுவனத்துடன் ராணா டக்குபதி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதை பெருமையாகக் கருதுவதாக முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்த நிலையில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இதில் தான் ஒரு அங்கமாக இருப்பது பெருமை என்றும் விஜய் சேதுபதி ட்வீட் செய்திருந்தார். முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில், விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்
நடிக்கும் யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?
விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் ❤️@VijaySethuOffl நடிக்கும்
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?
? ? ?— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 10, 2020
என்று அவர் பதிவிட்டுள்ளார்.