விஜய்யின் பிகில் ரிலீஸ் தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் – பட அதிபர் வேண்டுகோள்

0

விஜய்யின் பிகில் ரிலீஸ் தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் – பட அதிபர் வேண்டுகோள்

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘பிகில்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. இந்த படத்தில் விஜய் தந்தை, மகன் என்று இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. பிகில் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி என்பதால் வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யும்படி வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்துவதாகவும் இதன் மூலம் தீபாவளிக்கு முன்பே 3 நாட்களும் அதிக வசூல் பார்க்க முடியும் என்று கருதுவதாகவும் தகவல்கள் பரவின. இதனால் தீபாவளிக்கு படம் வெளியாகுமா? அல்லது அதற்கு முன்பாகவே திரைக்கு வருமா? என்ற குழப்பம் நிலவியது. ரசிகர்களும் பிகில் எப்போது திரைக்கு வரும் என்று கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதற்கு பதில் அளித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

“பிகில் ரிலீஸ் தேதி குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம். பிகில் படத்தின் தணிக்கை முடிந்த பிறகு படத்தின் சரியான ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்போம். இந்த படம் வசூலில் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கிறோம்.”

இவ்வாறு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறினார்.