விஜய்க்கு ஜோடியாகும் புஷ்பா படத்தின் நாயகி…?

0
99

விஜய்க்கு ஜோடியாகும் புஷ்பா படத்தின் நாயகி…?

தளபதி விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ‘டாக்டர்’ புகழ் நெல்சன் குமார் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள ‘அரபிக்குத்து’ பாடல் யூடியூபில் 15 கோடி பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு பிறகு வம்சி பைடிப்பள்ளி விஜய்யின் தனது 66வது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.

அதே நேரம் தென்னிந்திய மொழிகளில் தற்போது முன்னணியில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கலாம் என தகவல் கசிந்துள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் இதனை இன்னும் உறுதி செய்யவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். தமன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்தார். இப்படம் தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. கடந்த 20 வருட வாழ்க்கையில் இப்படியொரு கதையை கேட்டதில்லை என்று விஜய் ட்வீட் செய்திருந்தார். அப்போது அந்த ட்வீட் வைரலாக பரவியது. அன்று முதல் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை ஸ்ரீவெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில்ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.