விஜயகாந்த் இறந்ததால், மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ ரீ ரிலீஸ் ஆகிறது!

0
83

விஜயகாந்த் இறந்ததால், மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ ரீ ரிலீஸ் ஆகிறது!

ஜெயக்குமார் இயக்கத்தில் மன்சூர் அலிகான் தயாரித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘சரக்கு’.
ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். இதில் பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பழ கருப்பையா, பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

மன்சூர் அலிகான், அதிக நடிகர் பட்டாளத்துடன் எடுக்கப்பட்ட “சரக்கு” திரைப்படம் வெளியான அன்று கேப்டன் விஜயகாந்த் இறந்து விட்டதால் மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன்பு இருந்து விட்டனர். அதனால் படக்குழு படத்தை நிறுத்தி விட்டனர்.

இப்போது படத்தை உரிய நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளது. மன்சூர் அலிகான், யோகிபாபு, கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ் என அனைவரின் நடிப்பும் சிறந்த முறையில் வரவேற்பு பெற்றதால், வெளிநாடு உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடுகிறது படக்குழு!