விசித்திரன் விமர்சனம்: திடமான கதைக் கோலத்துடன் ஈர்க்கக்கூடிய த்ரில்லர் ‘விசித்திரன்’ | ரேட்டிங் – 4/5

0
210

விசித்திரன் விமர்சனம்: திடமான கதைக் கோலத்துடன் ஈர்க்கக்கூடிய த்ரில்லர் ‘விசித்திரன்’ | ரேட்டிங் – 4/5

இயக்குனர் எம். பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் விசித்திரன். படத்தில் பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிய இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவு: வெற்றி மகேந்திரன், படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா, கலை: மாயபாண்டி, நிர்வாக தயாரிப்பு: எம் செந்தில் குமார், வெளியீடு: ஆர் கே சுரேஷ் – ஸ்டூடியோ 9, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

மலையாள சினிமாவில் 2018-ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் கிரைம் திரைப்படமான ‘ஜோசப்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும், விசித்திரன்.
போலீஸ் கான்ஸ்டபிள் மாயன் (ஆர் கே சுரேஷ்) வீ ஆர் எஸ் வாங்கிவிட்டு மனைவியை பிரிந்து மகளுடன் தனியாக உடைந்த இதயத்துடன் பாட்டிலும், கையுமாக புகைபிடித்தபடி வாழ்கிறார். இவருக்கு எல்லாமே நண்பர்கள் தான். நண்பர்களும் இவரின் உணர்வுகளைப் புரிந்து ஜார்ஜுக்கு ஆதரவாகவும், அவருக்கு எல்லாமுமாகவும் இருக்கிறார்கள். மாயனுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் தொலைபேசியில் அழைப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. ஒரு வீட்டில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மாயனை உடனடியாக சம்பவ இடத்துக்குத் திரும்புமாறு எஸ்பி பரிந்துரைக்கிறார். மாயன் தனது பழைய பஜாஜ் சேடக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தது முதல், பார்வையாளர்கள் உற்சாகத்தில் மூழ்கிவிடுவார்கள். தன் நண்பர்களுடனும், இன்னும் காவல்துறையில் தனக்கு இருக்கிற மதிப்பின் மூலமும் நடந்த கொலையை விசாரிக்கிறார்.
இந்நிலையில், மகள் விபத்தில் இறந்து விட, மூலைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர். விரக்தியில் இருக்கும் மாயன் திடீரென்று தனது முன்னாள் மனைவி பூர்ணாவும்; விபத்தில் இறந்து அவரும் மூலைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சொல்ல, உடல் உறுப்புகளை தானம் செய்து விடுகின்றனர்.
தனது மகளின் அகால மரணமும், அதே பாணியில் மாயனின் முன்னாள் மனைவியின் இறப்பும் விபத்து அல்ல, உடலுறுப்பு தேவைக்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை எனத் தெரிய வர, ஆதார பூர்வமாக மருத்துவமனை மற்றும் கொலையாளியை நிருபிக்க சுரேஷ் எடுக்கும் முயற்சிகள் என்ன, அதற்காக அவர் என்ன எல்லாம் இழக்கிறார்? தான் அன்பாக நேசித்த மனைவியைப் பிரிய காரணம் என்ன? ஒரு சாதாரண கான்ஸ்டபிள் ஒரு பெரிய மெடிக்கல் மாபியாவை பொது வெளியில் எப்படி அம்பலப்படுத்தினார் என்பதே மீதிக்கதை.

மாயனாக ஆர்.கே.சுரேஷ் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று தனித்துவமான நடிப்பால் ஸ்கோர் செய்து சிறந்த குணச்சித்திர நடிகராக உயர்ந்துள்ளார். அவரது நடிப்புத் திறமை, நரைத்த மீசை, தாடி, கூர்மையான கண்கள், உடல் மொழி, தொந்தியும் தண்ணியுமாக அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள், என எல்லாமே படத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. விசித்திரன் நேரடி படமாக இருந்திருந்தால் நிச்சயமாக ஆர்.கே.சுரேசுக்கு பல விருகள் கிடைத்திருக்கும். உடலை வருத்தி உழைத்து தத்ரூபமாக காட்சிப்படுத்திய ஆர்.கே.சுரேஷிற்கு பாராட்டுக்கள்.

மாயனின் காதலியாக (மீனாட்சி) வரும் மதுஷாலினி, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மனைவியாக (ஸ்டெல்லா) வரும் பூர்ணா, பாச மகளாக (டயானா) பிரியதர்ஷினி, மற்றும் மாயனின் நண்பர்களாக வரும் இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள், உள்ளிட்ட அனைவரும் தாங்கள் சித்தரித்த பாத்திரங்களை நியாயப்படுத்தியிருக்கிறார்கள்…

சதீஷ் சூர்யா எடிட்டிங் வேலையை நிறைவாக செய்துள்ளார்.

வெற்றி மகேந்திரனின் ஒளிப்பதிவும், ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது.

மலையாளத்தில் இந்த ஜோசப் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பத்மகுமார் தான் தமிழிலும் விசித்திரன் திரைப்படத்தை இயக்குகிறார். உண்மையில் இக்கதையின் கரு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உடலுறுப்பு தானத்தில் இத்தனை பெரிய மோசடி வேலைகள் நடக்கிறது என்பதை த்ரில்லர் கதையை, சிறந்த பிரசன்டேஷனாக நேர்த்தியாக படைத்துள்ளார் இயக்குநர் பத்மகுமார்.

பார்வையாளர்களின் மனதை திரைக்கதையும், பிரசன்டேஷன் அமைப்பும் பரபரப்பைக் கைப்பற்றும் வல்லமை கொண்டவை என்பதில் ஐயமில்லை.

மொத்தத்தில் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்” தயாரிப்பில் உருவாகி சிறந்தவர் என்று சொல்லக்கூடிய ‘மாயனை’ பார்க்க அனைவரும் தைரியமாக டிக்கெட் வாங்கலாம். திடமான கதைக் கோலத்துடன் ஈர்க்கக்கூடிய த்ரில்லர் ‘விசித்திரன்’.