விக்ரம் வேதா ரீமேக் படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
80

விக்ரம் வேதா ரீமேக் படத்தின் வேதாவுடைய  பர்ஸ்ட் லுக் வெளியீடு!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா இயக்கிய புஷ்கர் – காயத்ரி இப்படத்தை இந்தியிலும் இயக்கி வருகின்றனர். ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படம் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் அறிவிப்பொன்றை இயக்குனர் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் வேதாவுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டனர். நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் 48வது பிறந்தநாளையும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ரசிகர்கள் உற்சாகத்தில் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

செப்டம்பர் 30, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.