‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸாக மிரட்டிய சூர்யாவுக்கு பரிசளித்த கமல் – வைரலாகும் புகைப்படம்

0
21

‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸாக மிரட்டிய சூர்யாவுக்கு பரிசளித்த கமல் – வைரலாகும் புகைப்படம்

விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய நடிகர் சூர்யாவுக்கு, கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. எதிர்பார்ப்புகளையும் மீறி இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியான 5 நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது ‘விக்ரம்’ படம்.

படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரின் நடிப்பும் பாராட்டுக்கள் பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு கமல்ஹாசன், தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதனைத் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து, LEXUS ES 300h என்ற சொகுசு காரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்-க்கு, கமல்ஹாசன் பரிசளித்திருந்தார்.

மேலும், லோகேஷின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் TVS Apache RTR 160 என்ற இருசக்கர வாகனத்தையும் நடிகர் கமல் பரிசளித்திருந்தார். இந்நிலையில், ‘விக்ரம்’ படத்தின் இறுதி 5 நிமிடக் காட்சியில், போதை பொருள் மாஃபியா கும்பலின் தலைவனாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் காட்டப்படும் நடிகர் சூர்யாவுக்கு, கமல்ஹசான், இயக்குநர் லோகேஷுடன் சென்று ஆடம்பரமான ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.