‘விக்ரம்’ படக்குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய கமல்ஹாசன்
நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் சென்னை தாம்பரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் கமல்ஹாசனின் பிறந்தநாளை இன்றே படக்குழு ‘ஹேப்பி பர்த்டே லீடர்’ என்ற கேக்குடன் கமல்ஹாசன் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் கேக்கை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.
கமல்ஹாசனுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஃபகத் ஃபாசில், நடன இயக்குநர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.