விக்ரம் – துருவ் விக்ரம் இணையும் ‘விக்ரம் 60’ படத்தின் டார்ஜிலிங் படப்பிடிப்பு நிறைவு

0
14

விக்ரம் – துருவ் விக்ரம் இணையும் ‘விக்ரம் 60’ படத்தின் டார்ஜிலிங் படப்பிடிப்பு நிறைவு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘விக்ரம் 60’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய, இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோருடன் சமீபத்தில் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் சென்ற படக்குழுவினர் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். மீதமுள்ள இறுதிக்கட்டப் படப்பிடிப்பை நேபாள எல்லையில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்த வார இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்து தமிழகம் திரும்புகின்றனர்.

‘விக்ரம் 60’ படத்திற்காக டார்ஜிலிங்கில் இருக்கும் புகைப்படத்தையும், வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து டார்ஜிலிங் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் துருவ் விக்ரம். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘விக்ரம் 60’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.