வாரிசு படம் ரூ. 210 கோடி வசூலித்திருப்பது 200 சதவீதம் வாய்ப்பில்லாத ஒன்று! திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையான பதில்!!

0
642

வாரிசு படம் ரூ. 210 கோடி வசூலித்திருப்பது 200 சதவீதம் வாய்ப்பில்லாத ஒன்று!

திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையான பதில்!!

சென்னை அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஜன.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் பொங்கலை வரவேற்றனர்.

விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும், வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விஜய் – அஜித் படங்கள் ஒன்றாக வெளியானதால், ரசிகர்கள் யாரின் படம் அதிக வசூல் பெறுகிறது என்பதை தினமும் கவனித்து வருகின்றனர்.

வாரிசு படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடியும், 7 நாட்களில் ரூ. 210 கோடியும் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் வசூல் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. வாரிசு படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வார நாட்களில் கூட வாரிசு நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்தியா மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் வாரிசு, வாரசுடு படங்களை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் தான் வசூல் விபரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அவ்வப்போது அப்படேட் கொடுத்து வருகிறது.

வாரிசு படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே ரூ. 210 கோடியா என பலரும் வியந்தார்கள். அதே சமயம் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் சினிமா ரசிகர்கள் கேட்டார்கள்.

இந்நிலையில், “தமிழ்நாடு முழுக்க ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டு படங்களும் சமமான வசூலைத்தான் குவித்து வருகின்றன. எவ்வளவு வசூல் என்பதை அறிய முன்பு போல் தியேட்டருக்குச் சென்று கேட்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. அனைத்து நிலவரங்களும் ஆன்லைனிலேயே கிடைக்கின்றன. விஜய், அஜித் இருவருமே முன்னணி நடிகர்கள்தான். அதனால், வசூலில் எவ்வித வித்தியாசமும் இல்லை. ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கேட்டால் ‘விஜய் நம்பர் ஒன்’ என்பார். போனி கபூரிடம் கேட்டால் ‘அஜித் நம்பர் ஒன்’ என்பார். வியாபாரத்துக்காக தங்கள் படத்தின் ஹீரோவை முன்னிலைப்படுத்திப் பேசுவது அவரவர் கடைமை.

‘வாரிசு’தான் அதிக வசூல் என்று விஜய் ரசிகர்களும், ‘துணிவு’தான் நம்பர் ஒன் என்று அஜித் ரசிகர்களும் சொல்லிக்கொள்ளலாம். இந்த இரண்டுமே உண்மையில்லை. இரண்டுமே சமமான வசூலைக் குவித்துக்கொண்டிருக்கின்றன.

படத்தின் வசூல் முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். அப்படி இருக்கும்போது வாரிசு படம் ரூ. 210 கோடி வசூலித்திருப்பது 200 சதவீதம் வாய்ப்பில்லாத ஒன்று என விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்த பொங்கலுக்கு வாரிசு படத்துடன் சேர்ந்து வந்த அஜித் குமாரின் துணிவு படத்தின் வசூல் குறித்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார் போனி கபூர். துணிவு’ படத்தின் வசூலை அதிகாரப்பூர்வர்மாக அறிவிப்பார்கர்ள் என அஜித்ரசிகர்கர்ள் கடந்த பத்துத் நாட்கட்ளாக ஆவலுடன் காத்திருக்கிறார்கர்ள். இருந்தாலும்படக்குழு சார்பிர்ல் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, தயாரிப்பாளர் போனி கபூருக்கு நெருக்கமானவரும் ‘துணிவு’ படத்தின்வினியோகஸ்தர்கர்ளில் ஒருவருமான ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியிட்டு உள்ள பதிவில்

வெளிநாடுகளைப் போல வெளிப்படையான பாக்ஸ் ஆபீஸ் டிராக்கிங் முறை வர நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என டிராக்கர்கர்ள் விமர்சர்கள் ஆகியோருக்கு சொல்லிக் கொள்கிறேன்.

அதுவரை பாக்ஸ் ஆபீஸ் சாதனை என்ன என்பதைப் பற்றி சண்டையிட்டுட்க் கொள்ளாமல் சினிமாவை அதன் தூய்மையான தன்மையுடன் ரசியுங்கள். இரண்டு படங்களையும் வெற்றிப் படமாக்கியதற்கநன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.