வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

0

வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

மணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்ய ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வளர்ந்து வரும் பாடகரான சித்ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் டீசர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை வெளியிட்டார். சாதாரண குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளும் விதமாக படம் விவரிக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.