‘வாங்க வாங்க’ நான் ஆம்பள சில்க்கா, பொம்பள சில்க்கா, எனக்கே தெரியவில்லை? – பவர் ஸ்டார் சீனிவாசன்

0

வாங்க வாங்க படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அப்புக்குட்டி, பெருந்துளசி பழனிவேல், அபிராமி ராமநாதன், ஐக்குவார் தங்கம், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, ‘நான் சினிமாவில் நிறைய பணம் இழந்திருக்கிறேன். சினிமாவுக்கு வரும் போது எனக்கு எதுவும் தெரியாது. ‘லத்திகா’ என்னும் படத்தை எடுத்தேன். இந்த படம் 275 நாட்கள் ஓடியது. ஓடியது என்று சொல்வதை விட நான் ஓட்டினேன் என்றே சொல்லலாம். படம் பார்க்க வருபவர்களுக்கு பிரியாணி எல்லாம் கொடுத்திருக்கிறேன்.

நான் சினிமாவில் தற்போது ஒரு நிலையாக இருக்கிறேன் என்றால், அதற்கு அப்போது நான் கஷ்டப்பட்டேன் என்பதுதான் காரணம். என்னை நடிக்க ஒரு நாள் அல்லது 2 நாள் படப்பிடிப்புக்கு மட்டுமே கூப்பிடுகிறார்கள். சம்பளமாக செக் வாங்க மாட்டேன். பணம்தான் வாங்குகிறேன். செக் என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது.

VAANGA VAANGA-1

என்னை ஒரு பாடலுக்கு நடனமாட அதிகமாக கூப்பிடுகிறார்கள். நான் ஆம்பள சில்க்கா பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை. முன்பெல்லாம் சில்க்கை தான் அதிகமாக பாடலுக்கு கூப்பிடுவார்கள். இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள்.

எனக்கென்று தனி ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. சினிமாவிற்காக நான் எது வேண்டுமானாலும் செய்வேன். எனக்கு போட்டியே ரஜினிதான். அவர் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு பெரிய ஸ்டாராக மாறினார் என்பது எனக்கு தெரியும். அதுபோல் நானும் இருக்க நினைக்கிறேன்’ என்றார்.