வனம் விமர்சனம் : காடுகளை காக்க புறப்படும் வனப்பெணின் கதை

0
29

வனம் விமர்சனம் : காடுகளை காக்க புறப்படும் வனப்பெணின் கதை

ஜமீன்தார் வானாதிராயன் பெண்களை சித்ரவதை செய்து சீரழிக்கும் பழக்கமுடையவர். வன்னாத்திபாறை என்ற மலைக்கிராமத்தில் கல்லூரி கட்ட ஆசைப்பட, அங்கே வசிக்கும் மல்லி  மற்றும் சில மலைவாழ் குடும்பங்களை துரத்தி கொலை செய்து புதைத்து விடுகிறார். அந்த இடத்தில் சிற்பக்கலைக் கல்லூரி கட்டுகிறார். ஜமீன்தார் இறந்தவுடன் அந்த கல்லூரியை அருண்கோபால் நடத்துகிறார். கல்லூரியில் படிக்க சேரும் மகிழ் அவருடைய அறையில் மர்மமான முறையில் நண்பர்கள் தற்கொலை செய்து கொள்ள, அதற்கான காரணத்தை தன் தோழி ஜாஸ்மினுடன் சேர்ந்து கண்டு பிடிக்க முயல்கிறார். அதன் பின் அவர்கள் கண்டுபிடித்த மர்மம் என்ன? ஏன் நடக்கிறது? தற்கொலை சம்பவங்கள் நடக்காமல் தடுத்தார்களா? என்பதே க்ளைமேக்ஸ்.

இதில் வெற்றி –   மகிழ், ஸ்ம்ருதி வெங்கட் –  ஜாஸ்மின், அனுசித்தாரா – மல்லி , வேலராமமூர்த்தி – வானாதிராயன், அழகம்பெருமாள் – அருண்கோபால், பிரதீப் –  உற்சவன், தேசிங்குராஜா – கரும்பாளி இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக வாழ்ந்து, படத்தின் தத்ரூபமான காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
காடுகள், இரண்டு விதமான காலகட்டங்கள், கல்லூரி, விடுதி , சிற்பங்கள், மாயக்கண்ணாடி என்று வியக்கும் வண்ணம் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்.

கதைக்களத்திற்கேற்ற ரான் ஈத்தன் யோஹான் இசை குறிப்பிடும்படி உள்ளது.

எடிட்டிங் : பிரகாஷ் மப்பு, கலை: வீரமணி கணேசன், ஸ்டண்ட் : சுதீஷ் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர். திரைக்கதை : ஸ்ரீகண்டன் ஆனந்த், மாதவா, ஐசக் பசில், வசனம்: ஐசக் பசில் ஆகியோர் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

கற்பனை கலந்த திகில் கதையில் மறுபிறபி, முன்ஜென்ம தோற்றம், பழி வாங்குதல் என்ற திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும், கொஞ்சம் காட்சிகளில் விறுவிறுப்பையும் கூட்டியிருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் இயக்குனரின் கடின உழைப்பிற்கும், முயற்சிக்கும், க்ளைமேக்ஸ் காட்சிக்கோணங்களும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கோல்டன் ஸ்டார்  புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் தயாரித்திருக்கும் வனம், காடுகளை காக்க புறப்படும் வனப்பெணின் கதை.