லேபர் விமர்சனம்: லேபர், போராட்ட வாழ்க்கை என்றாலும் அசைக்க முடியாத கல்தூண்

0
74

லேபர் விமர்சனம்: லேபர், போராட்ட வாழ்க்கை என்றாலும் அசைக்க முடியாத கல்தூண்

ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்து சத்தியபதி எழுதி இயக்கியிருக்கும் படம் லேபர். இதில் நிஜில்தினகரன் இசையமைக்க, சி.கணேஷ்குமார்  படத்தொகுப்பை மேற்கொள்ள ஒலி கலவையை கிருஷ்ணமூர்த்தி செய்துள்ளார். மக்கள் தொடர்பு-ஆறுமுகம்.

கட்டிடங்களை கட்டும் மேஸ்திரி, அவரின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி  எடுக்கப்பட்டிருக்கும் படம். மேஸ்திரி தன் மகனை கடன் வாங்கி இன்ஜினீயருக்கு படிக்க வைக்க படாதாபாடு படுகிறார். கணவன் முருகன் மனைவி சரண்யா இருவரும் கட்டிடத்தில் வேலை செய்து கிடைக்கும் கூலியில் வாழ்க்கை நடத்துகின்றனர். முருகனோ குடிக்கு அடிமையானதால் வீட்டில் எப்போழுதும் சண்டை, அதனால் குடியிருக்கும் வீட்டை மாற்றிக் கொண்டே இருக்கின்றனர். திருநங்கை ஜீவா போராட்ட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு பணத்தை கொடுத்து உதவும் நல்ல குணம் கொண்டவர். இவர்கள் அனைவரும் ஏலச்சீட்டு தம்;;;பதிகளிடம் மாதாமாதம் சம்பாதிக்கும் பணத்தை கட்டுகின்றனர். அந்த ஏலச் சீட்டு தம்பதிகள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்ற, போலீசுக்கு புகார் செல்கிறது. போலீஸ் அவர்களை பிடித்து விசாரிக்க பணத்தை சினிமா படம் எடுக்க கொடுத்து விட்டதாக தம்பதியர் கை விரிக்கின்றனர். சீட்டில் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்ட மக்கள் மனமுடைந்து செல்கின்றனர். இவர்களின் வாழ்க்கை விடியாத விடியலாக பழைய நிலைக்கே செல்வதை சொல்லுவதும், எவ்வளவு இழப்பு ஏற்பட்டாலும் அதை தாண்டி மீண்டும் வேலைக்கு சென்று சாதிக்க துடிக்கும் கட்டிட தொழிலாளர்களைப் பற்றியே படத்தின் கதை.

இதில் நடித்திருக்கும் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், திருநங்கை ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம், அனைவருமே படத்தின் கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

நிஜில் தினகரன் இசை படத்தின் ஒட்டத்திற்கு துணை போகிறது. கணேஷ்குமார் முதல் பாதியில் சில காட்சிகளை கச்சிதமாக எடிட் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சத்தியபதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் லேபர் படம் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு. கட்டிட தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை முறையை ஒவ்வொரு காட்சியிலும் சொல்லி அவர்கள் படும் துன்பத்தையும், இயலாமையையும், இன்னல்களையும் முடிந்த வரை சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சத்தியபதி. இறுதிக் காட்சி சோகத்திலும் ஆச்சர்யத்தை கொடுக்கும் முடிவு.

மொத்தத்தில் லேபர், போராட்ட வாழ்க்கை என்றாலும் அசைக்க முடியாத கல்தூண்.