லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதியன்று திரையரங்குகளில் லியோ திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த படம் தான் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூலை குவிக்கும் படமாக அமையும் என எதிர்பார்ப்புகள் உள்ளன.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து லியோ படத்தினை தயாரிக்கின்றன.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் லியோ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நடிகர் விஜய்-யின் பிறந்த நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி உள்ளது. இதனை அதன் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.