லியோ திரைப்பட டிக்கெட் வாங்க ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு…!

0
206

லியோ திரைப்பட டிக்கெட் வாங்க ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு…!

பூந்தமல்லி காவல் நிலையத்தின் கீழ் மூன்று திரையரங்குகள் செயல்பட்டு வரும்
நிலையில் உறிய பாதுகாப்பு இன்றி டிக்கெட் விநியோகம் செய்யப்படுவதால் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 19ஆம் தேதி வெளியாகிறது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியாகுமா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ள நிலையில் திரையரங்குகளில் காட்சிகள் உறுதிப்படுத்தப்படாததால் டிக்கெட்டுகள் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் திரைப்படத்திற்குச் சிறப்பு காட்சி அனுமதி கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்தில் பூந்தமல்லியில் உள்ள தனியார் திரையரங்கில் லியோ படத்திற்கான டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது இதனால் ரசிகர்கள் தினம் தோறும் சென்று தியேட்டர் வாசலில் வந்து காத்திருந்து திரும்பி சென்றனர். நேற்றைய தினம் பூந்தமல்லியில் உள்ள திரையரங்கில் லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை வாங்க காலை முதல் ரசிகர்கள் திரையரங்கின் வாசலில் குவிந்தனர்.

திடீரென டிக்கெட் வழங்கப்படும் நேரத்தில் காத்திருந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டினார்கள். இதில் லியோ திரைப்படத்தின் காலை சிறப்பு காட்சி வெளியாகுமா என்ற முழுமையான அறிவிப்பு வராத நிலையில் மதியம் மற்றும் மாலை காட்சிக்கான டிக்கெட்டுகள் மட்டுமே திரையரங்கில் வழங்கப்பட்டது.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்து வரும் சூழலில் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதோடு ஒருவர் மீது ஒருவர் ஏறி விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கின்றது. திரையரங்க நிர்வாகம் சார்பில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் நேரத்தை முன்கூட்டியே காவல் நிலையத்தில் தெரிவித்து உரிய பாதுகாப்புடன் டிக்கெட் விற்பனையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.