ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்

0
114

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம்

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘Production No 14’ படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவிஸ்
இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை
இயக்கம் – மகிழ் திருமேனி
இசை – அரோல் கரோலி
ஒளிப்பதிவு – K.தில்ராஜ்
கலை – T.ராமலிங்கம்
படத்தொகுப்பு – ஶ்ரீகாந்த் NB
பாடல்கள் – மதன் கார்க்கி
தயாரிப்பு நிர்வாகம் – E.ஆறுமுகம்
விநியோக நிர்வாகம் – ராஜா.C
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

மற்ற நடிகர், நடிகையர் விவரம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.