ரியல் ஜோடிகளாகும் நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி: நிச்சயதார்த்த ஃபோட்டோவை பகிர்ந்து நெகிழ்ச்சி!

0
59

ரியல் ஜோடிகளாகும் நிக்கி கல்ராணி – ஆதி ஜோடி: நிச்சயதார்த்த ஃபோட்டோவை பகிர்ந்து நெகிழ்ச்சி!

நடிகர்களான ஆதியும், நிக்கி கல்ராணியும், ரகசியமாக நிச்சயார்த்தம் செய்துகொண்டதாக, கடந்த இரு நாட்களாக தகவல் பரவிவந்தநிலையில், அவர்களின் நிச்சயார்த்தம் நடைபெற்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வ வெளியாகி, புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

தமிழில் ‘மிருகம்’, ‘அரவான்’, ‘ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆதி. இதேபோல், தமிழில் ஜிவி பிரகாஷின் ‘டார்லிங்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இவர்கள் இருவரும் சேர்ந்து ‘மரகத நாணயம்’ மற்றும் ‘யாகாவாராயினும் நா காக்க’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக, நிக்கி கல்ராணி – ஆதியின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், நிக்கி கல்ராணி மற்றும் ஆதி, தங்களது சமூகவலைத்தள பக்கங்களில், தங்களின் நிச்சயார்த்த புகைப்படங்களை பகிர்ந்து, அதனை உறுதி செய்துள்ளனர். மேலும், மகிழ்ச்சியான பதிவொன்றையும் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்தப் பதிவில், “வாழ்க்கையில் மிக நல்லவிஷயம் என்னவெனில் ஒருவரையொருவர் பற்றிக்கொள்வதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரப்பூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.3.22… இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம். எங்களின் புதிய பயணத்தில், உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை” என்று பதிவிட்டுள்ளனர். இதையடுத்து விரைவில் தம்பதிகளாக ஆக உள்ள இவர்களுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.