ராஜவம்சம் விமர்சனம்

0
78

ராஜவம்சம் விமர்சனம்

கிராமத்தில் மிகப்பெரிய குடும்ப பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்த சசிகுமார் சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்ய மிகப்பெரிய பிராஜக்ட் ஒன்று கொடுக்கப்படுகிறது. தன்னுடைய வேலையில் கவனத்துடனும் ஆர்வத்துடனும் செய்ய இன்னொரு பக்கம் சசிகுமாரின் குடும்பத்தினர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கின்றனர். திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து முடியாமல் போக, காதலியாக நிக்கி கல்ராணியை அழைத்துக் கொண்டு வருகிறார். இதனால் சசிகுமார் திருமணமா? இல்லை  பிராஜக்ட்டா என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். இரண்டையும் எப்படி சமாளித்தார்? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

குடும்பம், காதல், நட்பு வழக்கம்போல் சசிகுமார் தன்னுடைய யதார்த்தமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நிக்கி கல்ராணி அழகாகவும், அற்புதமாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தில் யோகிபாபு, சிங்கம்புலி, சதீஷ் ஆகியோரின் நகைச்சுவைகள் ரசிகர்களை சில இ;டங்களில் மட்டும் சிரிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறது.

ராதாரவி, விஜயகுமார், தம்பி ராமையா, நிரோஷா மனோபாலா, கும்கி அஸ்வின்,ஆடம்ஸ், சரவணா சக்திமணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோ நாராயணன்,சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, சந்தான லட்சுமி,சசிகலா,யமுனா,மணி சந்தனா, மணிமேகலை, மீரா, லாவன்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் எதற்கென்றே தெரியாமல் வந்து போகிறார்கள்.

சாம் சி.எஸ். பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. அதோடு கிராமத்து அழகை மாறாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சித்தார்த்.
கிராமத்து பின்னணியை மையமாக கொண்ட படமாக இருப்பதால் குடும்பம், உறவு, காதல், வேலை என்ற வட்டத்துக்குள்ளேயே வந்திருப்பதால் திரைக்கதையில் கொஞ்சம் அழுத்தமும் ஆழமும் இருந்திருந்தால் கதை இன்னும் விறுவிறுப்பாக சென்றிருக்கும். ஐடி சம்பந்தப்பட்ட கதை, விவசாயம், குடும்பம் என்று கமர்சியல் கலந்த கதையாக இயக்குனர் கே.வி.கதிர்வேலு இயக்கி இருக்கிறார்.

மொத்தத்தில் செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா மற்றும் டாக்டர்.சஞ்சய் குமார் தயாரிப்பில் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ராஜவம்சம் கூட்டு குடும்ப வாழ்க்கை பின்னணியை மறக்காமல் இருக்கச் சொல்கிறது.