ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் ஆலியா?

0
86

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் ஆலியா?

பாலிவுட் அழகி ஆலியா பட் டோலிவுட்டில் தனி கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜமௌலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ (ரௌத்ரம்..ரணம்..ருத்திரம்) படத்தில் ராம்சரண் ஜோடியாக அலியா பட் நடித்திருந்தார். மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இன்னொரு ஹீரோவாக என்டிஆர் நடித்திருந்தார்.

என்டிஆர் ஹீரோவாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோயினாக தன்னை அணுகியதாக அலியா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமீபத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்கலாம் என பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. மகேஷ்பாபு ஹீரோவாக ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படம் திரைக்கு வரவுள்ளது என்பது தெரிந்ததே. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க படக்குழுவினர் பரிசீலித்து வரும் பெயர்களில் அலியா பட்டின் பெயர் முதல் வரிசையில் உள்ளது. மேலும்.. வெள்ளித்திரையில் புது ஜோடியாக மகேஷ் – ஆலியா தோன்றுவார்களா? காத்திருக்க வேண்டும்.