ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டர் வெளியீடு!

0
6

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டர் வெளியீடு!

’பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கெனவே, ராஜமெளலி மூன்று படங்களில் ஜூனியர் என்.டி.ஆருடன் பணியாற்றியுள்ளார். ராம் சரணுடன் ’மஹதீரா’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கானும், நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிடோர் நடித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘பீம்’ கதாப்பாத்திரத்தின் டீசரையும், ராம் சரண் நடிக்கும் ‘ராமராஜு’ கதாப்பாத்திரத்தின் டீசரையும், ஆலியா பட்டின் ‘சீதா’ கதாபாத்திரத்தின் போஸ்டரும் வெளியான நிலையில், இன்று அஜய் தேவ்கானின் 52-வது மோஷன் போஸ்டர் டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. ஆனால், அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிடவில்லை. டீசரில் துப்பாக்கிக்கள் சூழ நடுவில் ஆக்ரோஷமாய் வெளிப்படும் அஜய் தேவ்கான் உடையும் மிரட்டல் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது.