ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

0
47

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஆர்ஆர்ஆர்’ கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. இந்த நிலையில், தற்போது இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளை அறிவித்திருக்கிறது.

”நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ’ஆர்ஆர்ஆர்’ படத்தினை வரும் மார்ச் 18 ஆம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போதும் வெளியிட முடியவில்லையென்றால் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியிடுகிறோம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.