ரஷியாவில் வளர்ந்த சத்யா ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் ‘அன்பறிவு’

0
77

ரஷியாவில் வளர்ந்த சத்யா ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கும் ‘அன்பறிவு’

அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, நெப்போலியன், காஷ்மீரா,  விதார்த், சாய்குமார், ஆஷா சரத் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அன்பறிவு’. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், எடிட்டர் ப்ரதீப் ராகவ் பணியாற்றும் இப்படத்தினை தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் தனது சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைக்கிறது.

இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ரஷியாவில் நடந்தது. டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதிகளின் மகள் சிவானி ராஜசேகர் பங்கேற்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

பொன் பார்த்திபன் வசனம் எழுதியிருக்கிறார். சில காட்சிகள் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டன.