‘ரம்ஜானுக்கு லாபம் ரிலீஸாகும்’ விஜய் சேதுபதி அறிவிப்பு!

0
14

‘ரம்ஜானுக்கு லாபம் ரிலீஸாகும்’ விஜய் சேதுபதி அறிவிப்பு!

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ’லாபம்’ படம் வரும் ரம்ஜான் அன்று மே 14 ஆம் தேதி வெளியாகிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதோடு இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை’ படத்தில் இணைந்த எஸ்.பி ஜனநாதன்- விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் லாபம் படத்தில் இணைந்தனர். சமீபத்தில்தான் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்நிலையில், பட வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனையொட்டி, ’எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் படத்தின் அனைத்து பணிகளையுயும் முடித்துக்கொடுத்துவிட்டார். படம் ஏப்ரலில் வெளியாகிறது’ என்று சமீபத்தில் அறிவித்திருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி.

இந்நிலையில், ‘லாபம்’ ரம்ஜானையொட்டி அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளதோடு இரண்டாவது பாடலான ’Yaamili Yaamiliyaa’ பாடலை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்தப் பாடலை எஸ்.பி ஜனநாதனுக்கு சமர்ப்பிதாக அறிவித்திருந்தார் விஜய் சேதுபதி. அவர், குறிப்பிட்டப்படியே பாடல் முழுக்க எஸ்.பி ஜனநாதனே நிறைந்திருக்கிறார். மேக்கிங் வீடியோவில் முழுக்க முழுக்க நாயகனாய் எஸ்.பி ஜனநாதனே ஆக்கிரமித்துள்ளார். பாடலின் கடைசியில் அவரை அன்புடன் விஜய் சேதுபதி அணைப்பதோடு பாடல் நிறைவடைவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.