ரஜினியின் 169வது படத்தை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர்! – தீயாய்ப் பரவும் தகவல்!
சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ‘அண்ணாத்த’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினியோடு சேர்ந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்பதுதான் தற்போது கோலிவுட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.
கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி என இருவரின் பெயர் இதில் அதிகமாக பேசப்படுகிறது, ஆனால், ரஜினி இவர்களில் தேசிங்கு பெரியசாமியை தான் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிங்கு பெரியசாமியின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை பார்த்து வியந்த ரஜினி அப்போதே அவரை அழைத்து அடுத்த படத்திற்கான கமிட்மெண்ட் கொடுத்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.