ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்

0
29

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவில் நடிப்பிலும் ஸ்டைலிலும் சூப்பர் ஸ்டாராக தற்போதுள்ள நடிகர்களுக்கும் டஃப் ஃபைட் கொடுத்து கடந்த 46 ஆண்டுகளாக ’சிக்ஸர்’அடித்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.

நேற்று அவரது 71 வது பிறந்தநாள். இதனையொட்டி, அவரது ரசிகர்களும் பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஹர்பஜன் சிங், சச்சின் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்துகளால் சமூக வலைதளங்களை திணறடித்தனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த், அவரது கணவர் விசாகன், குழந்தை வேத், தனுஷ் மகன் லிங்கா, அனிருத் அப்பா ரவிச்சந்தர், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் உற்சாகமாக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். செளந்தர்யா ரஜினிகாந்த் ஹூட் ஆப்பில் தற்போது பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.