ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ வெளியீடு!
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
‘காவாலா’ என்ற இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
It’s time to vibe for #Kaavaalaa 💃🏼. Lyric video is out now!💥
▶️ https://t.co/Pd7nBg8h4l@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer #JailerFirstSingle
— Sun Pictures (@sunpictures) July 6, 2023