ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

0
42

ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பதுதான் ரஜினி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்கள் .

ரஜினிகாந்தின் 169-ஆவது படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.