ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகரின் மனைவியிடம் பேச்சுவார்த்தை

0

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகரின் மனைவியிடம் பேச்சுவார்த்தை

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அடுத்து ரஜினி, இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்‌ஷன் கலந்த குடும்பம் மற்றும் ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஜினியுடன் ‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.