ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்

0
41

ரசிகர்களை கவரும் டான் படத்தின் பாடல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டிருந்த சமயத்தில் மார்ச் மாதம் 25-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகுமென அறிவித்து ரசிகர்களை சந்தசோஷப்படுத்தியது படக்குழு.

இந்நிலையில், டான் படத்தின் அடுத்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்யா குரலில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.