ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!
ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்ட்டி காலனி 2’ ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 10 வருடங்களுக்கு முன் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் திரில், திகில் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த திரைப்படம், ரசிகர்களைத் திகிலின் உச்சத்திற்குக் கூட்டிச் செல்கிறது. இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் டிமான்ட்டி காலனி திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்.
மிகச்சிறந்த படைப்பாளி அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ முதல் படம் விட்ட இடத்திலேயே தொடங்குகிறது. முதல் பாகத்தின் கதைக்களம், ஸ்ரீனிவாசன், விமல், ராகவன் மற்றும் சஜித் ஆகிய நான்கு நண்பர்களைச் சுற்றி வருகிறது. 19 ஆம் நூற்றாண்டில் பணக்கார போர்த்துகீசிய தொழிலதிபர் ஜான் டிமான்ட்டி என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு, அவர் அனுபவித்த தனிப்பட்ட சோகங்களிலிருந்து உருவாகும் சாபங்கள் மற்றும் அமானுஷ்யங்களால் புனைவுகள் சூழ்ந்த திகில் ஸ்தலமாக இருக்கிறது. இப்படம் பேய் நம்பிக்கையைத் தாண்டி, இயற்கைக்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் ஒரு கதைக்களத்திற்குள் நம்மை ஆழமாக இழுத்துச் செல்கிறது, தங்களின் சாபத்திலிருந்து தப்பிக்க நண்பர்கள் ஒரு வழியைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் – அவர்கள் அறியாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் அழைத்த சாபத்தைத் தவிர்க்க முடியாதது என்பதை உணர மட்டுமே முடிகிறது. இந்த இரண்டாம் பாகம் அந்த உலகிற்குள் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்..,
“இறுதியாக ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தை, அனைத்து ரசிகர்களுக்கும் ZEE5 மூலம் கொண்டு வருவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! திரையரங்கு வெளியீட்டின் போது கிடைத்த வரவேற்பு, நாங்கள் எதிர்பாராதது. இந்த OTT பிரீமியருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதை நான் அறிவேன். இப்போது, அவர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்து, இந்த திரில், திகில் உலகை ரசிக்க முடியும். இப்படத்தின் மீது, ரசிகர்கள் காட்டும் அன்பும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இப்போது அனைத்து ரசிகர்களும் இந்த மாய உலகிற்குள் மீண்டும் பிரவேசிக்கவுள்ளதைக் காண ஆவலுடன் உள்ளேன்.
முன்னணி நடிகர் அருள்நிதி கூறுகையில்..,
“ZEE5 இல் ‘டிமான்ட்டி காலனி 2’ இன் பிரீமியர் காட்சிக்காக நான் ஆவலாக உள்ளேன்! இந்த படம் எங்கள் அனைவரின் ஒருங்கிணைந்த உழைப்பால், அன்பால் உருவானது. திரையரங்குகளின் போது எங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு நடிகராக, ஒரு இரண்டாம் பாகத்திற்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எப்போதும் எனக்கு இருக்கிறது, குறிப்பாக முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றபோது, இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய அழுத்தத்தை நாங்கள் உணர்ந்தோம், மேலும் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டோம். ஆனால் இப்போது கிடைக்கும் இந்த பேரன்பு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ZEE5 பிரீமியர் மூலம் இப்படம், இன்னும் அதிகமான பார்வையாளர்களைச் சென்றடையும் என்பது மகிழ்ச்சி. இது எங்களுக்கு ஒரு பெரிய தருணம், மேலும் இந்த திரில் சாகசத்தை, நாங்கள் ரசித்ததைப் போல அனைவரும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்!”
‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் தற்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!