யோகிபாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன் – பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்

0
7

யோகிபாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன் – பிரபல இயக்குனர் ஓப்பன் டாக்

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘மண்டேலா’. கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்படம், பின்பு ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர்.

அந்த வகையில், மண்டேலா படத்தை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், ஒரு சிறந்த காமெடி படம் என்று பாராட்டியதோடு, யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கூறி உள்ளார். இதற்கு நடிகர் யோகிபாபு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

பல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ள யோகிபாபு, இதுவரை கவுதம் மேனனுடன் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. தற்போது கவுதம் மேனனே, அவருடன் பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளதால், இந்த கூட்டணி விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.