யஷ் பிறந்தநாள்: ‘கேஜிஎஃப் 2’ புதிய போஸ்டர் வெளியீடு

0
153

யஷ் பிறந்தநாள்: ‘கேஜிஎஃப் 2’ புதிய போஸ்டர் வெளியீடு

’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ’கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

2022 ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த நிலையில், இன்று யஷ்ஷின் 36 வது பிறந்தநாளையொட்டி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்க்கிறார் யஷ்.