மெர்சல் இசைவெளியீட்டில் ரகுமான் இசைக்கச்சேரி – சந்தோஷத்தில் இளையதளபதி விஜய் ரசிகர்கள்!

0

மெர்சல் இசைவெளியீட்டில் ரகுமான் இசைக்கச்சேரி – சந்தோஷத்தில் இளையதளபதி விஜய் ரசிகர்கள்!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

இளையதளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார்.

தினம் தினம் விருந்து என்று கூறும் வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை விஜய் ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டு வருகிறது. இதனால் இளையதளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அத்துடன் `மெர்சல்’ படத்தை டிரெண்டாக்கியும் வருகின்றனர்.

அந்த வகையில், படக்குழு சமீபத்தில் ஒரு ரூசிகர தகவலை வெளியிட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக `மெர்சல்’ படத்திற்கான எமோஜியை படக்குழு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மெர்சல் என்று டைப் செய்தால் விஜய் படம் எமோஜியாக அருகில் தோன்றுகிற வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக முக்கிய நிகழ்வுகளுக்கும் பெரிய திரைப்படங்களுக்கும் மட்டுமே இதுபோன்ற ஒரு அங்கீகாரம் ட்விட்டர் தளத்தில் கிடைக்கும். தமிழ்ப் படங்களில் இதுபோன்ற எமோஜி முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை இளையதளபதி விஜய்யின் நெருங்கி நண்பரும், `மெர்சல்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ரம்யா சுப்ரமணியம் இணைந்து தொகுத்து வழங்க இருக்கின்றனர். அன்றைய தினம் ட்வீட் செய்யும் அனைவருடைய ட்வீட்டும் எமோஜியோடு இடம்பெறும். இதன் மூலம் மிகப்பெரிய விளம்பர யுக்தியை ‘மெர்சல்’ படக்குழு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது.

பிரபலங்கள் வருவது மட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு வருகின்றன ரசிகர்களை மகிழ்விக்க ரகுமானின் இசைக்குழு இசைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக பாடல்களை குழுவினரோடு இணைந்து பாடுவார் என கூறப்பட்டுள்ளது. இதனால், இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.