மூத்த பத்திரிகையாளர்களை ஜாம்பவான்களாக பெருமைப்படுத்திய பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனம்

0
60

மூத்த பத்திரிகையாளர்களை ஜாம்பவான்களாக பெருமைப்படுத்திய பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனம்

பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் இணைந்து நடத்தும் லோகோ மற்றும் அறிவிப்பு விழா பார்க் ஹோட்டல் அண்ணா சாலையில் நடைப்பெற்றது.

வரலாற்றில் இல்லாமல் முதல்முறையாக தமிழ் திரையுலக திசையை தீர்மானித்த திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களின் சாதனைகளை பாராட்டி மகிழ பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் , பிளாக் ஷீப் மற்றும் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து நடத்தும் 80 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான அறிமுக நிகழ்விற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு மட்டுமில்லாமல் அவர்களை கௌரவப்படுத்தும் விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளம், திரு.பஞ்சு அருணாச்சலம் அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் விதமாகவும் , தமிழ் திரையுலகின் பன்முகத்திறன் வாய்ந்த பல்வேறு சாதனையாளர்களை இன்றைய இளைஞர்களுக்கு கொண்டுசேர்க்கும் முதல்படியாகவும் இவ்விழாவினை முன்னெடுத்து பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் திரு.சுப்பு பஞ்சு அவர்களுடன் ஒருங்கிணைத்து நடந்த விழாவில் பிற சங்க நிர்வாகிகளும் தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பாராட்டு விழாக்களை கண்ட பத்திரிகையாளர்களுக்கு இந்த விழா வித்தியாசமானதாகவும், பெரு மகிழச்சியாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா விழாக்களில் பெரும்பாலும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் விருது பெரும் பொழுது எப்பொழுதாவது தான் சினிமா பத்திரிகையாளர்களையும் கௌரவிப்பார்கள். ஆனால் இந்த விழாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குனர்கள் தலைமையில் மூத்த பத்திரிகையாளர்களை கண்டறிந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக விழாவினை ஏற்பாடு செய்திருந்தது தான் சிறப்பம்சம்.

நடிகர்களை ஜாம்பவான்களாக தங்கள் விமர்சன எழுத்துக்களால் சித்தரித்து புகழ் சேர்த்த பத்திரிகையாளர்களை இந்த விழா அவர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை ஜாம்பவான்களாக சித்தரித்து அவர்களுக்கு புகழ் சேர்த்த விதம் பாராட்டுக்குரியது.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக , பல தசாப்தங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் சினிமா பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் , தங்களுடைய எழுத்துக்களாலும் சிந்தனைகளாலும் , வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்த்து அனைவருக்கும் பிடித்த சினிமாவுக்கு தங்களின் ரசனையின் மூலம் அழகு சேர்த்து இன்று சினிமா ஜாம்பவான்களாய் ஓங்கி உயர்ந்து நிற்கும் தமிழகத்தின் மூத்த சினிமா பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விழாவாக நடைபெற்றது.

இவ்விழாவில் சினிமா உலகின் பழம்பெரும் மூத்த பத்திரிக்கையாளராய், 72 ஆண்டுகள் தன்னுடைய எழுத்துக்களால் கோலோச்சி உச்சம் பெற்ற பின்னும், இன்றும் நிற்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் 90 வயது நிரம்பிய ‘கலைப்பூங்கா’ திரு.டி.என்.இராவணன் அவர்களின் சுறுசுறுப்பையும், அனுபவத்தையும் பாராட்டி அனைத்து முக்கிய பிரமுகஸ்தர்களும் எழுந்து நின்று அவரின் சாதனைக்கு கை தட்டி பாராட்டி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றிய மூத்த மூன்று பத்திரிகையாளர்கள் தேவிமணி, தேவராஜ், ஜெயசந்திரன் ஆகியோரையும் சேர்த்து நால்வருக்கும் பாராட்டு பட்டமும், வெள்ளி பதக்கமும் கொடுத்து கௌவரவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் தாங்கள் கடந்த வந்த கடினமான பாதையையும், தமிழ் சினிமாவில் தங்களுடைய இனிப்பான சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதன் பின்,

எழுத்தாளர், இயக்குனர, தயாரிப்பாளர், விநியோகஸ்தர். பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நீங்கா இடத்தை பிடித்தவர் பஞ்சு அருணாச்சலம். கவிஞர் கண்ணதாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திரையுலகில் அடியெடுத்து வைத்த பஞ்சு அருணாச்சலம், பாடலாசிரியராக 200 படங்களுக்கு பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் எழுத்தாளராக, 100 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய அவரின் அளப்பறிய சேவைக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் பஞ்சு அருணாசலம் 80 எனும் பிரம்மாண்ட விழாவிற்கான லோகோசின்னம் மற்றும் அறிவிப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ் திரைப்படத் துறையின் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குநர்,இசையமைப்பாளார் , பாடலாசிரியர் கங்கை அமரன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, சித்ரா இலட்சுமணன், டி.ஜி.தியாகராஜன், தமிழ்நாடு விநியோகஸ்தர சங்கத் தலைவர் அன்பு செழியன், திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் , பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, தனஞ்செழியன், தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ் காமாட்சி, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கார, காட்ரகாட் பிரசாத், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி முருகன் முக்கிய பிரமுகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான A CREATOR WITH MIDAS TOUCH படத்தின் இயக்குநர் தனஞ்ஜெயன் மற்றும் தயாரிப்பாளர்களான லலிதா ஜெயானந்த், உமாமகேசுவரி சத்யகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

திரையுலக விழாவினை ப்ளாக் ஷிப் விக்னேஷ் மற்றும் அரவிந்த் இருவரும் தொகுத்து வழங்கினர். இவ்விழாவினை வெற்றி விழாவாக ஒருங்கிணைத்த பிரதீப் மற்றும் பிளாக் ஷிப் குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கும் ‘கலைப்பூங்கா’ குழுமம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.