முருங்கைக்காய் சிப்ஸ் விமர்சனம்: ரசிகர்களை வசப்படுத்தாத சுவை குறைந்த நமத்துப் போன சிப்ஸ்!

0
62

முருங்கைக்காய் சிப்ஸ் விமர்சனம்: ரசிகர்களை வசப்படுத்தாத சுவை குறைந்த நமத்துப் போன சிப்ஸ்!

புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்தப் படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி, பாக்கியராஜ், மனோபாலா, ஆனந்தராஜ், மயில்சாமி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஓளிப்பதிவு ரமேஷ் சக்ரவர்த்தி கவனிக்க, தரண்குமார் இசையமைத்துள்ளார்.
லிப்ரா புரொடக்ஷன் சார்பாக வி.சி.ரவீந்தரன் தயாரித்திருக்கிறார்.
சாந்த்னு பாக்யராஜக்கும், அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்களின் முதலிரவுக்கு முன் சாந்தனுவின் தாத்தா பாக்யராஜ் பேரனிடம் ஒரு கண்டிசனை  போடுகிறார். அதாவது, முதல் இரவில் மனைவியைத் தொடக்கூடாது என்பது அவர்களது குடும்ப வழக்கமாம். அப்படி முதலிரவு நடந்தால் ரூ.300 கோடி பரம்பரை சொத்து முழுவதையும் ஆசிரமத்துக்கு எழுதி வைத்து விடுவேன். மேலும் இருவரும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இன்னொரு பக்கம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி உங்கள் இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை என்றால் குழந்தை பிறக்காது என்ற தோஷம் இருக்கு, அதனால் எப்படியாவது முதலிரவு நடைபெற வேண்டும் என்று கூறுகிறார்.
முதலிரவின் போது அதுல்யா உடலுறவுக்காக சாந்த்னுவை கவர முயற்சிக்கிறார். சாந்த்னு மறுக்கிறார். மீண்டும் அதுல்யா முயற்சிக்க, சாந்த்னு மறுக்க…., இறுதியில் சாந்தனுவுக்கும், அதுல்யாவுக்கும் இடையே முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஓரே அறையில் கதை நகர்;வதால் சாந்த்னு பாக்யராஜ், அதுல்யா ரவி தங்களுடைய ழுழுநடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லை. இருந்தாலும் கதைக்கு என்ன தேவையோ அதை இருவரும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள். தனது நடன அசைவுகளால் அனைவரையும் கவர்கிறார் சாந்தனு.

ரமேஷ் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவும், தரண்குமாரின் இசையும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகி பாபு, முனிஸ்காந்த், மயில்சாமி, மதுமிதா ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் ரவீந்தர் தன் பங்குக்கு நகைச்சுவை செய்ய முயற்சிக்கிறார்.

படத்தில் நகைச்சுவை இருக்கு ஆனால் இல்லை. முதலிரவை மையக்கருவாக வைத்து பலவீனமான திரைக்கதையுடன், சுவாரஸ்யமில்லா நகைச்சுவை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர்.

மொத்தத்தில்  லிப்ரா புரொடக்ஷன் சார்பாக வி.சி.ரவீந்தரன் மற்றும் பர்ஸ்ட் மேன் பிலிம்ஸ் சார்பாக சிவசுப்பரமணியன், சரவண பிரியன் இணைந்து தயாரித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் ரசிகர்களை வசப்படுத்தாத சுவை குறைந்த நமத்துப் போன சிப்ஸ்!