முதல் முறையாக கோயம்புத்தூரில் Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert!!

0
179

முதல் முறையாக கோயம்புத்தூரில், Return Of The Dragon ஹிப் ஹாப் தமிழா ஆதியின் Music Concert!!

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் Icon ஆக கொண்டாடப்படும்,  ஹிப் ஹாப் தமிழா ஆதியின்  “Return Of The Dragon” இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. Torque  Entertainment மற்றும் Raj melodies  நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

தமிழக Independent Music துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் Icon ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. “Return Of The Dragon” எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் Music Concert யை நடத்தவுள்ளார்.

Torque  Entertainment மற்றும் Raj melodies நிறுவனங்கள் இணைந்து  இந்த Music Concert யை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன.
இந்த Music Concert ல் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த Music Concert, இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.

இந்த Music Concert ல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும்  இதற்கு முன்பாக நடைபெற்ற Concert ல்  ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு,  அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்துரில் வரும் செப்டம்பர்  8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.