முதல் நீ முடிவும் நீ விமர்சனம்: ‘முதல் நீ முடிவும் நீ’ 90களின் மலரும் நினைவுகள்

0
105

முதல் நீ முடிவும் நீ விமர்சனம்: ‘முதல் நீ முடிவும் நீ’ 90களின் மலரும் நினைவுகள்

சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ள படம் முதல் நீ முடிவும் நீ. அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், மு.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் ஊளுஏ, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குநர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீPஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர்), வாசுதேவன் (கலை), பு.வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் னுமுனு (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் ஆ.சு(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

90களின் இறுதியில் பள்ளி இறுதியாண்டில் இருக்கும் நண்பர்கள் வினோத் (கிஷன் தாஸ்), சைனீஸ் (ஹரீஷ்), சுரேந்தர் (கவுதம் ராஜ்), துரை (சரண் குமார்) நால்வர்கூட்டம் இனம்புரியாத ஈர்ப்பு, அன்பு, மாணவர்களுக்கேயுரிய மோதல் என்று எல்லாமுமாகச் சேர்ந்து பள்ளி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். வினோத்தும் அவரோடு பள்ளியில் படிக்கும் ரேகாவும் (மீத்தா ரகுநாத்) சிறு வயது முதலே காதலித்து வருகின்றனர். படிப்பை விட இசையில் அதிக நாட்டத்துடன் இருக்கும் வினோத்தின் கனவுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அவரது பிறந்தாளன்று ஒரு கிதாரை பரிசளிக்கிறார். அமைதியாக செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் சக மாணவியான விக்டோரியா என்ற பெண்ணால தடம் மாறுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

வினோத் என்ற கதாபாத்திரத்தில் வரும் கிஷன் தாஸ், மீத்தா ரகுநாத், அம்ரிதா மண்டரின், சரண்குமார் ராகுல் கண்ணன், மஞ்சுநாத், வருண் ராஜன், சச்சின் நாச்சியப்பன், கௌதம் ராஜ், நரேன், ஹரிணி, ஆகியோரது நடிப்பும் கச்சிதம்.

குறிப்பாக சைனீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ், படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக நிற்கிறார்.

சுஜித் சரங் ஒளிப்பதிவு படத்திற்கு வலு சேர்க்கிறது.

ஸ்ரீஜித் சரங் எடிட்டிங்கில் அன்னும் கொஞ்சம் கத்திரி வைத்திருந்தால் படத்தின் ஓட்டம் அதிகரித்து பேசப்பட்டிருக்கும்.

சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் பள்ளி சேட்டைகள், காதல், கொண்டாட்டம், என ஜாலியான பள்ளி வாழ்வை மையமாகக் கொண்டு அவர்களை ஒரு ஏக்கம் நிறைந்த பயணத்திற்கு அழைத்துச் செல்வது மற்றும் அவர்களின் இதயங்களை ஆழமாக சென்றடைவது உறுதி, ஏனெனில் பெரும்பாலான காட்சிகள் மிகவும் தொடர்புபடுத்தக்கூடிதாகவும் அதே சமயத்தில் ஜனரஞ்சகமான திரைப்படமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தர்புகா.

மொத்தத்தில் ‘முதல் நீ முடிவும் நீ’ 90களின் மலரும் நினைவுகள்.