முதல்வரை நேரில் சந்தித்த பாண்டவர் அணி
2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையானது நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணி சார்ந்த தலைவர் நாசர் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்திக், துணைத் தலைவர் பூச்சி முருகன், மனோபாலா, கோவை சரளா, லதா உள்ளிட்ட வெற்றிபெற்ற நிர்வாகிகள் பலர் முதல்வரின் தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசுகையில், நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றிருக்கும் புதிய நிர்வாகம், மிகப்பெரிய வெற்றி யோடு முதலர்வரை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறோம் என்று தெரிவித்தார். சமீபகாலமாக நடிகர் சங்க தேர்தல் வரலாற்றை பற்றி முதமைச்சர் கேட்டறிந்ததாகவும், அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் செய்து தர முடியுமோ அதை செய்து தருவதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பை தந்த தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அவர் முதல்படியாக பாதியில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கக்கூடிய நடிகர் சங்க தேர்தல் கட்டிடத்தை முடிப்பதே எங்களுடைய கோரிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.