முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி

0
21

முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை, நடிகர் விஜய் சேதுபதி கோரிமேட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் சினிமா படப்பிடிப்புக்கு முன்பு ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரூ.28 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.