மீண்டும் விமர்சனம்: ஒரு தேசத்தை பாதுகாக்கும் உளவாளியின் கதை

0
110

மீண்டும் விமர்சனம்: ஒரு தேசத்தை பாதுகாக்கும் உளவாளியின் கதை

ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன் வழங்கும் மீண்டும் படத்தில் கதிரவன், சரவண சுப்பையா, பிரணவ் ராயன், துரை சுதாகர், டைரக்டர் யார் கண்ணன், டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, டைரக்டர் கேபிள் சங்கர், ஆதர்ஷ், அனாகா, சுபா பாண்டியன், அனுராதா, அபிதா ஷெட்டி, தர்ஷினி, இந்துமதி மணிகண்டன், மோனிஷா நடித்துள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தின் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருக்கிறார், சரவண சுப்பையா. ஒளிப்பதிவினை ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் செய்து இருக்கிறார். நரேன் பாலகுமார்  இசை அமைத்து இருக்கிறார், ராஜாமுகம்மது எடிட்டிங் செய்துள்ளார். மக்கள் தொடர்பு- டைமண்ட் பாபு.

காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் கதிரவன்- அனகா.   பாதுகாப்புத் உளவுத்துறையில் பணியாற்றும் கதிரவன் மனைவி அனகா கர்ப்பமாக இருக்கும் நிலையில் பணி நிமித்தமாக வெளியூர் செல்கிறார். கணவனின் வருகைக்காக காத்திருந்து, அனாகா மனமுடைந்து பெற்றோருடன் சென்று விடுகிறார். குழந்தை இறந்து பிறந்து விட்டதாக சொன்ன பெற்றோரை நம்பி கதிரவனை விட்டே பிரிந்து போய் விடுகிறார் அனாகா.பெண்ணின் பெற்றோர் பிறந்த குழந்தையை அநாதை இல்லத்தில் சேர்த்து விட அனாகவிற்க்கு வேறு திருமணம் முடிந்து விடுகிறது. பணி முடிந்து திரும்பி வரும் கதிரவன் தனது குழந்தையை கண்டு பிடித்து வளர்த்து பாசத்துடன் தனது மகனுக்காகவே  வாழ்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அனாகாவின் கணவன் சரவண சுப்பையா மற்றும் அவரது அம்மா , தங்கைகள் அனைவரும் இறை நம்;;பிக்கையோடு நல்ல குணங்களும் கொண்டவர்கள். அனாகாவின் கண்ணில் கதிரவனும், குழந்தையும் தென்பட, அவர்களை தேடி சென்று குழந்தையை கேட்கிறார் அனாகா. இதற்கு முதலில் எதிர்க்கும் கதிரவன், பின்னர் மனம் மாறி குழந்தையை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார். அதன் பின் உளவுத்துறையில் முக்கிய வேலைக்காக அழைப்பு வர, செல்லும் கதிரவன் உயிரோடு திரும்பி வந்தாரா? குழந்தையுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? என்பதே கதையின் முடிவு.

கதிரவன், சரவண சுப்பையா, அனகா ஆகிய மூவரும் தங்களது கதாபாத்திரத்தினை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்க  அனகாவிற்கு அழுத்தமான நடிப்பில் பாசத்திற்காக ஏங்கும் அம்மாவை கண்முன் நிறுத்தி குழந்தைக்காக இரண்டு கணவர்களுக்குமிடையே அவர் படும் போராட்டத்தினை முகபாவனையில் சிறப்பாக காட்டி இருக்கிறார்.
பிரணவ் ராயன், துரை சுதாகர், டைரக்டர் யார் கண்ணன், டைரக்டர் எஸ்எஸ்.ஸ்;;டான்லி, டைரக்டர் கேபிள் சங்கர், ஆதர்ஷ், அனாகா, சுபா பாண்டியன், அனுராதா, அபிதா ஷெட்டி, தர்ஷினி, இந்துமதி மணிகண்டன், மோனிஷா உள்ளிட்ட இதர கதாபாத்திரங்கள் கதையை நகர்த்த உதவியுள்ளன.

வைரமுத்து மற்றும் ஷரவண சுப்பையாவின் பாடல்களுக்கு நரேன் பாலகுமாரின் இசை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
சீனிவாச தேவாம்சத்தின் ஒளிப்பதிவு பெரும் உதவி செய்து பயணித்து இருக்கிறது.

ஒரு பெண்ணிற்கும் அவரது இரண்டு கணவர்களுக்கும் இடையே ஒரு குழந்தைக்காக நடக்கும் உணர்வுகளின் பாசப் போராட்டம் என்ற ஒரு கோணத்திலும், இலுமினாட்டி, சுனாமி, கருப்பு பணம், உளவாளி என்று; இன்னொரு கோணத்தில் கதை பயணிக்கிறது, ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடியிருக்கும். இரண்டுமே கலந்த கலவையாக எங்கு எப்பொழுது எங்கே கதை பயணிக்கிறது என்று ஊகித்து முடிப்பதற்குள், நிர்வாண சித்ரவதை, இந்திய தூதரகம் என்று வலுக்கட்டாயமாக திணித்து கதையை முடிநத்துள்ளார் இயக்குனர் சரவண சுப்பையா. இருந்தாலும் அவரின் பல வருட போராட்டத்திற்கு பிறகு வெளிவந்த படத்தின் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஹீரோ சினிமாஸ் சி.மணிகண்டன் வழங்கும் மீண்டும் ஒரு தேசத்தை பாதுகாக்கும் உளவாளியின் கதை.