மீண்டும் வரும் முந்தானை முடிச்சு: முக்கிய ரோலில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ்..!

0
209

மீண்டும் வரும் முந்தானை முடிச்சு: முக்கிய ரோலில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்றது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 37 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் ஊர்வசி நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இத்திரைப்படத்தை 2021-ம் ஆண்டு திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.