மீண்டும் இணையும் பாலா – சூர்யா கூட்டணி…

0
6

மீண்டும் இணையும் பாலா – சூர்யா கூட்டணி…

‘எரியும் பனிக்காடு’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பாலாவின் ‘பரதேசி’ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதர்வா முரளி, வேதிகா, ரித்விகா என அனைவருமே நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இந்த நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு அதர்வா முரளியும் பாலாவும் மீண்டும் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் இணைகிறார்கள்.

துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு பாலா இப்படத்தை இயக்குகிறார். அதோடு, ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ’வித்தகன்’பாலா தயாரிப்பில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘அவன் இவன்’ படங்களில் சூர்யா பாலா இயக்கத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில், சூர்யா தயாரிப்பில் முதன் முறையாக பாலா படம் இயக்குகிறார். இப்படத்தின், அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார் என்றும் அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.