மிகவும் தாமதமாக ரிலீசுக்கு தயாராகும் நயன்தாரா படம்

0
3

மிகவும் தாமதமாக ரிலீசுக்கு தயாராகும் நயன்தாரா படம்

நடிகைநயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு தெலுங்கில் கோபிசந்துக்கு ஜோடியாக அவர் நடிக்க ஒப்பந்தமான படம் ‘ஆறடுகுலா புல்லட்’.

இப்படத்தை முதலில் தமிழ் திரையுலகை சேர்ந்த பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டதால், பின்னர் பிரபல தெலுங்கு இயக்குனர் பி.கோபால் படத்தை இயக்கினார். சுமார் ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் கிடைத்தது.

இருப்பினும் பல்வேறு காரணங்களால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.