மாஸ்டர் ஒரு ’மாஸ்டர் பீஸ்’: விஜய் சேதுபதி

0
97

மாஸ்டர் ஒரு ’மாஸ்டர் பீஸ்’: விஜய் சேதுபதி

மாஸ்டர் ஒரு மாஸ்டர் பீஸ் என்று அப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் 64 வது படமான மாஸ்டர் படத்தை மாநகரம், கைதி வெற்றிப் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். அனிருத் இசையமைப்பில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், மாஸ்டர் படம் குறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தில் வில்லனாக எஞ்சாய் பண்ணி நடித்தேன். அனைவரின் மனதிலும் ஒரு அழுக்கு இருக்கும். அதனை வெளியேற்ற வழி இருக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், வில்லனாக நடிக்கும்போது அந்த அழுக்கை வெளியே கொண்டுவர வழி உள்ளது. மாஸ்டர் ஒருமாஸ்டர் பீஸ். அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் என்று தெரிவித்திருக்கிறார்.

இப்படத்தில், பவானி என்ற வில்லன் கேரக்டரில் சிறு வயது பருவம், வளர்ந்த தோற்றம் என இரண்டு தோற்றங்களில் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதில், சிறுவயது விஜய் சேதுபதியாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார்.