மார்ச் 31-ல் வெளியாகும் கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’

0
49

மார்ச் 31-ல் வெளியாகும் கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’

’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கடந்த மாத இறுதியில் தாம்பரத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்டப்படிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது கோவையில் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு இருநாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது.

இதில், கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. தொடர்ச்சியாக ஒரு மாதம் கோவையில் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடிக்கவுள்ளனர். இந்த நிலையில், விக்ரம் வரும் மார்ச் 31 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு வெளியாகும் படங்களின் பட்டியலில் விக்ரம் மார்ச் 31 ஆம் தேதியும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ ஏப்ரல் 28 ஆம் தேதியும், சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஜனவரி 26 ஆம் தேதியும் பட்டியலில் உள்ளன