மாயநதி திரை விமர்சனம்

0

மாயநதி திரை விமர்சனம்

ரேட்டிங்

கதை:
சிறு வயதிலேயே தாயை இழந்த வெண்பாவிற்காக ஆடுகளம் நரேன் வேறொரு கல்யாணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய மகளுக்காக மட்டுமே வாழ்த்து வருகிறார். பள்ளியில் +2படித்து வரும் தன்னுடைய மகளை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என்பது தான் இவருடைய ஆசை. அபிசரவணன் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார். ஜாலியாக இருக்கிறார். வெண்பா வழக்கமாக செல்லும் ஆட்டோ டிரைவர் இல்லாததால் சில நாட்கள் அபிசரவணன் வெண்பாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறார். இது நட்பாகி காதலாகவும் மாறுகிறது. அப்பாவின் எச்சரிக்கையையும் மீறி அபிசரவணனை காதலிக்கிறார். இந்த காதல் வெண்பாவின் படிப்பிற்கு தடையாக அமைகிறது. அதன் பின் வெண்பாவின் படிப்பு என்ன ஆகிறது? காதல் என்ன ஆகிறது? அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? என்பதே மீதிக்கதை.

க எதார்த்தமாக நடித்துள்ளார் அபி சரவணன். நாயகி வெண்பா அபி சரவணனின் காதல், அப்பாவின் பாசம், டாக்டராக வேண்டும் என்ற கனவு என நடிப்பில் கதையின் இன்னொரு ஹீரோவான ஆடுகளம் நரேனுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர். தந்தை கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். அபிசரவணனின் நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, கார்த்திக் ராஜா இரு கதாபாத்திரமும் படத்திற்கு எனர்ஜி சேர்க்கிறார்கள்.

பவதாரணியின் இசை அற்புதம், கவிஞர் யுகபாரதி எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை. ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதிவும், கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங்கும் கச்சிதம்.

மயில் கிருஷ்ணன் கலை மற்றும் தினேஷ் மாஸ்டர் நடன இயக்கமும் சிறப்பாக உள்ளது.

பருவ வயதில் இயல்பாக ஏற்படும் காதல், அதனால் அவர்களின் எதிர்காலம் எப்படி ஆகிறது என்பதை சிம்பிளான கதைகளத்தில் ‘மாயநதி” என்ற கவித்துவமான டைட்டிலோடு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கியிருக்கிறார் அஷோக் தியாகராஜன்.

மொத்தத்தில் ராஜி நிலா முகில் பிலிம்ஸ் தயாரித்துள்ள யதார்த்தமான படம் ‘மாயநதி”.

நம்ம பார்வையில் ‘மாயநதி” படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.