‘மாஃபியா – சேப்டர் 1’ திரை விமர்சனம்

0

‘மாஃபியா – சேப்டர் 1’ திரை விமர்சனம்

ரேட்டிங்

நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா சேப்டர் 1. பிரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
நேரம் – 2 மணி நேரம் 30 நிமிடம்

கதை:
போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் ஆர்யா (அருண் விஜய்). அவருக்கு துணையாக சத்யாவும் (பிரியா பவானிசங்கர்) வருணும் இருக்கிறார்கள். போதைப்பொருட்களுக்கு அடிமையாகிக் கிடப்பதால், அதை அறவே ஒழிக்க வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணம். அவர்களால் போதை மருந்து கடத்தல் தொடர்பாகக் கீழ்மட்டத்தில் இருக்கும் ஆட்களைப் பிடிக்க முடிந்ததே தவிர, உச்சத்தில் இருக்கும் நபரைப் பிடிக்க முடியவில்லை. அந்தக் கும்பலின் தலைவன் யார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் போது, போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவன் யார் என தனக்குத் தெரியும் என்றும், அவனைப் பற்றிய கூடுதல் ஆதாரங்கள் கிடைக்கும்வரை யாரிடமும் இதைப்பற்றிச் சொல்ல முடியாது என்றும் ஆர்யா குழுவின் தலைவர் கூறுகிறார். இந்நிலையில் போதைப் பொருள் பிரிவின் உயரதிகாரி மற்றும் சமூக ஆர்வலர் (தலைவாசல் விஜய்) கொல்லப்படுகிறார்கள்.இதையடுத்து, ஆர்யாவுக்கு ஒரு லீட் கிடைக்க சரியான திட்டம்போட்டு போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் முக்கிய புள்ளி திவாகரை (பிரசன்னா) நெருங்குகிறார். தன்னை ஆர்யா நெருங்கி வருவதை அறிந்த திவாகர் ஆர்யாவின் குடும்பத்தினரைக் கடத்திவிடுகிறார். ஆர்யா தன் குடும்பத்தினரை மீட்டாரா? போதைப் பொருள் கும்பலின் பின்னணியில் இருப்பது யார்? போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க முடிந்ததா? என்பதுதான் ‘மாஃபியா – சேப்டர் 1 படத்தின் மீதிக்கதை.

போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஆர்யா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக கச்சிதமாக அசத்தியுள்ளார். மாஃபியாவின் முக்கிய புள்ளியாக திவாகர் கதாபாத்திரத்தில் பிரசன்னா சும்மா வந்து போகிறார். படத்தில் இருவருக்கும் ஓவர் பில்டப்பைக் கொடுத்துள்ளார் இயக்குனர்.

சத்யா கதாபாத்திரத்தில் ஆர்யாவின் உதவியாளராக வந்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார் பிரியா பவானி ஷங்கர். மற்றும் வருண் கதாபாத்திரத்தில் பாலா ஹாசன் நன்றாக நடித்துள்ளனர்.

கோகுல் பெனோய்யின் ஒளிப்பதிவு, விவேக்கின்; பாடல் வரிகள் மற்றும் ஜாக்ஸ் பெஜோய்யின் பின்னணி இசை இவர்கள் இருவரும் தான் படத்தை சற்று பொறுமையுடன் பார்க்க சீட்டின் நுனி வரை உட்கார வைக்கின்றனர்.

முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற கார்த்திக் நரேன் ‘மாஃபியா – சேப்டர் 1″ திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், ஸ்டைலிஷான காட்சியமைப்பு, ஸ்லோமோஷன் காட்சிகள், கிளைமேக்ஸ் டுவிஸ்ட் இவைகளுக்கு மட்டும் சபாஷ் பெறுகிறார்.

மொத்தத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘மாஃபியா – சேப்டர் 1’ விறுவிறுப்பு குறைவு.

நம்ம பார்வையில் ‘மாஃபியா – சேப்டர் 1’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.