மலாய் மொழியில் டப்பாகும் கபாலி

0

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கபாலி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இப்படம் விரைவில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் விநியோகிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் இப்படம் மலாய் மொழியிலும் டப் செய்யப்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி இப்படம் டப் செய்யப்பட்டால் மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘கபாலி’ பெறும்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மலேசியாவிலேயே நடைபெற்றிருப்பதாலும், மலேசியாவில் ரஜினிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதாலும், இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மலேசியா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள மாலிக் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலேசியா மீடியா கம்பெனியின் உதவியுடன் இந்த டப்பிங் பணியை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு மலாய் மொழியில் டப்பிங் செய்யப்படும் ‘கபாலி’ படம் இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 300 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இவ்வாறு அங்கு அதிக திரையரங்குகளில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் ‘கபாலி’தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.