‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்…!

0
297

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்…!

இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் நடந்த ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பரபரப்பானது. டிக்கெட் எடுத்தவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை, குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர். போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் வலைத்தளத்தில் திட்டி தீர்த்தனர்.

இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “இசை கச்சேரியில் சிறப்பாக எனது கடமையை செய்ய வேண்டும், மழை பெய்து விடக்கூடாது என்ற நினைப்புதான் எனக்குள் இருந்தது. மற்ற ஏற்பாடுகள் உரிய வகையில் செய்யப்பட்டு இருக்கும் என்று நினைத்தேன்.

உள்ளே மகிழ்ச்சியோடு பாடிக்கோண்டு இருந்தேன். வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் குவிந்தனர். அவர்களின் அன்பை கையாள முடியவில்லை. தற்போதைய எதிர்வினைகளை எதிர்பார்க்கவில்லை.

நான் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறேன். பெண்கள், குழந்தைகள் இருந்ததால் பாதுகாப்பு முக்கியமாக இருந்தது. இந்த சம்பவத்துக்கு யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நகரம் விரிவடைகிறது என்பதையும், இசையை ரசிக்கும் ஆர்வமும் அதிகமாகிறது என்பதையும் உணர வேண்டும்.

இது எனக்கு ஒரு பாடம். இசைக்கலைஞர் என்பதை தாண்டி உள்கட்டமைப்பிலும் கவனம் செலுத்த என்னை தூண்டி உள்ளது. இனிமேல் இதுபோல் நடக்க விடமாட்டோம்” என்றார்.